Local

இலங்கையில் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள்

இலங்கையில் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பகுதிகள் கொரோனா அச்ச நிலை பிரதேசங்கள் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இத்தாலி உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்த 6000க்கும் அதிகமானோர் வீடுகளில் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 3460க்கும் அதிகமானோர் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் ஆபத்தான பகுதிகளாக கண்டறியப்பட்ட குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு சங்கத்தின் தலைவர் உபுல் ரேஹன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading