LocalUncategorized

இலங்கையில் மே 17ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

மே 17 ஆம் திகதி நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊடரங்கு உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய 23 மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். காலை 5 மணி முதல் 15 மணிநேரம் ஊரடங்கு தளர்த்தப்படும்.
எனினும், மே 17 ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களைத்தவிர ஏனைய மாவட்டங்களில் 18 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படும். பின்னர் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும்.
காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் நடைமுறை மே 23 ஆம் திகதிவரை தொடரவுள்ளது
கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகள் 16 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும். அதன்பின்னர் 18 முல் மீண்டும் தொடரும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading