Local

இலங்கையில் 30 வருடங்களின் பின்னர் நியமிக்கப்பட்ட முஸ்லிம் அரசாங்க அதிபர் பதவி நீக்கம்

இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட முஸ்லிம் ஒருவர், ஒன்றரை வருடங்களின் பின்னர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், “இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடானது இன ரீதியான பழிவாங்கலா” என்று, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா என்பவர், 2018ஆம் ஆண்டு ஜுலை மாதம், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா, இலங்கையில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இரண்டாவது முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதை அடுத்து, இலங்கையில் அரசாங்க அதிபராகப் பதவி வகித்து வந்த ஒரேயொரு முஸ்லிம் எனும் நிலையிலிருந்த ஐ.எம். ஹனீபா, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, பொது நிர்வாக அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அரசாங்க அதிபர் பதவியிலிருந்து ஹனீபா நீக்கப்பட்டமை தொடர்பாக சமீபத்தில் நாடாளுமன்றில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன்; அரசாங்க அதிபர் பதவி வகித்த ஒரேயொரு முஸ்லிம் அரசாங்க அதிபரையும், அந்தப் பதவியிலிருந்து தற்போதைய அரசாங்கம் விலக்கியமை தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்டா

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading