Local

இலங்கையில் QR Code முறையில் எரிபொருள் விநியோகம்!!

(QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்று (15) காலை 6. மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு இன்றி எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது.

வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறவில்லை எனில், 2026.03.14 நள்ளிரவு முதல் https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாக தமக்குரிய QR குறியீட்டைப் பதிவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

வாகனத்தின் உரிமையாளர் அல்லது தொலைபேசி இலக்கம் மாறியிருப்பின், 2026.03.15 காலை 6.00 மணி முதல் அதே இணையத்தளத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

முன்னர் QR பதிவு செய்யாதவர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (RMV) புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், இன்று காலை 6.00 மணி முதல் https://fuelpass.gov.lk/ இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு (லீட்டரில்):

பேருந்துகள் : 60
மோட்டார் சைக்கிள்கள் : 5
வேன்கள் : 40
மோட்டார் வாகனங்கள் : 15
மோட்டார் லொறிகள்: 200
காணி வாகனங்கள் : 25
முச்சக்கர வண்டிகள்: 15
விசேட தேவைக்கான வாகனங்கள் : 40
குவாட்ரிசைக்கிள்கள் (Quadricycle): 5

நாட்டின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading