ஜெருசலேமில் ஈரான் பாரிய தாக்குதல்!!
இன்று சனிக்கிழமை ஜெருசலேம் நகரின் வான்பரப்பில் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி வந்து கொண்டிருப்பதாக அந்நாட்டு ராணுவம் எச்சரிக்கை விடுத்த சில நிமிடங்களிலேயே இந்தத் தாக்குதல் தொடங்கியுள்ளது. தாக்குதலின் போது ஜெருசலேம் மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளில் வான்வழித் தற்காப்பு ஏவுகணைகள் எதிரிநாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததால் பலத்த சத்தங்கள் கேட்டன. இதனால் பொதுமக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இஸ்ரேலிய தற்காப்புப் படைகள் (IDF) இந்த அச்சுறுத்தலை முறியடிக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும், பெரும்பாலான ஏவுகணைகள் திறந்தவெளிப் பகுதிகளில் விழுந்ததால் இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.