போரினால் ஆட்டம்காண்கிறது அமெரிக்காவின் பொருளாதாரம்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது போர் தொடுத்த பிறகு, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு மற்றும் மசகு எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் அமெரிக்கப் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.
போர் தொடங்கிய கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், S&P 500 குறியீட்டில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பில் சுமார் 2.2 டிரில்லியன் டொலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
S&P 500 குறியீடு 0.61 வீதம் சரிந்து 6,632.19 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இது 2026 ஆம் ஆண்டில் பதிவான மிகக் குறைந்த அளவாகும்.
மேலும், போருக்கு முந்தைய உச்சத்திலிருந்து இது சுமார் 5 வீத சரிவைச் சந்தித்துள்ளது.
ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் முதலீட்டு நிதிகள் நேரடியாகப் பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இந்தச் சரிவு சாதாரண அமெரிக்கக் குடிமக்களின் சேமிப்பைப் பாதிக்கும் என அஞ்சப்படுவதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
#IranvsUSA #IranVsIsrael #IranAttack #InternationalNews #IransPower #AmericaLoss

You must be logged in to post a comment.