Local

இலங்கையைப் போன்ற மோசமான மோசடிகள் நடக்கக்கூடிய நாட்டை காட்டுமாறு வைத்தியர் சவால்!

சீனி இருப்புக்களைப் பதுக்கி வைக்கும் நண்பர்களுக்கு இலாபம் இரட்டிப்பாகும். இது போன்ற மோசடி செய்யக் கூடிய நாடு உலகில் எங்கே உள்ளது சொல்லுங்கள்  எனதேசிய ஒருங்கமைப்பு ஒன் றியத்தின் அமைப்பாளர்  வைத்தியர்  வசந்த பண்டார தெரி வித்துள்ளார்.
சீனி இருப்புக்களை மறைத்து வைப்பதன் மூலம் சீனி இறக்குமதி செய்து பதுக்கி வைத்து கொள்பவர்கள் சீனி ஒரு கிலோவில் 31 ரூபா அதிக இலாபம் ஈட்டிக் கொள்கின்றனர் என தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.
29,000 மில்லியன் சீனி வரி மோசடிக்கு மேலதிகமாக இந்த இலாபம் ஈட்டப்படுவதாக அதன் அமைப்பாளர் வைத்தியர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் வரிச்சலுகையின் படி, ஒரு கிலோ சீனியின் விலை 85 ரூபாவாகும் அதனால் சீனி இறக்கும தியாளர்களுக்கு அனைத்து செலவுகள் மற்றும் சராசரி இலாபம் உட்பட 85 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாகச் செலுத்த வேண் டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு கிலோ சீனிக்கு 116 ரூபா கொடுப்பதற்குப் பதிலாக, சீனி இறக்குமதி செய்து பதுக்குவர்களுக்கு 31 ரூபா கூடுதல் இலாபம் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட சீனி இருப்புக்கள் மற்றும் நாட்டில் உள்ள ஏனைய சீனி இருப்புக்களை அந்த விலையில் விற்றால், பதுக்குவர்களுக்கு 20,000 மில்லியன் இலாபம் கிடைக் கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்திர மோசடியால் மேற்கொண்ட சேதத்தை விட பண மோசடி மிகவும் தீவிரமானது என்றும், இதுபோன்ற முட்டாள்தனமான அல்லது மோசமான மோசடிகள் நடக்கக்கூடிய ஒரு நாடு உலகில் எங்காவது இருந்தால் காட்டுமாறு சவால் விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த குழுக்கள் ஜனாதிபதியின் நற்பெயருக்கும் இலாபத்திற்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரி வித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading