Local

இலங்கையை தாக்கிய புயல் 41 பில்லியன் டொலர் நேரடி சேதம்!!

இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ புயல் தாக்கம் காரணமாக கட்டிடங்கள், விவசாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் நேரடிச் சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கியின் தெரிவித்துள்ளது.

உலக வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாவது, இது இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4 சதவீதமாகும் என சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் அழிவுகரமான இந்தப் புயலினால் 25 மாவட்டங்களிலும் உள்ள சுமார் 2 மில்லியன் மக்களும் 5 இலட்சம் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெல், மரக்கறி பயிர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத் துறைக்கு 814 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளது. இது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading