இலங்கை இரத்தினக்கற்களுக்கான தலைநகரில் Uber சேவையின் அறிமுகம்
இலங்கையின் முன்னணி வாகனச் சேவை மற்றும் விநியோகத் தளமான Uber, இரத்தினபுரியில் தனது Uber Eats மற்றும் Uber Rides சேவைகளைத் தொடங்கியுள்ளதாக அறிவித்ததுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் தனது சேவையை மேலும் விரிவுபடுத்துகிறது. இனி அப்பகுதி மக்களும் அங்கு வருகை தருகின்றவர்களும் Uber செயலி மூலம் உணவு, மளிகைப் பொருட்கள், அன்றாட அத்தியாவசியத் தேவைகள் மற்றும் நம்பகமான போக்குவரத்து வசதிகளைப் பெறலாம்;. அதேவேளையில், உள்ளூர் வணிகர்கள், விநியோகப் பங்காளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வளர்ச்சி மற்றும் வருமானம் ஈட்டுவதற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
இம்மாவட்டத்தின் பரந்த பிரதேசங்களில் Uber Eats சேவை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் XYZ போன்ற பிரபலமான உள்ளூர் உணவகங்கள் மற்றும் மளிகை, சில்லறை விற்பனைப் பங்காளிகளிடமிருந்து ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து அவற்றை எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். அதேவேளையில், Uber Rides சேவையானது, இருசக்கர, முச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத் தெரிவுகள் மூலம் இரத்தினபுரி மாவட்டம் முழுவதும் பயணிக்க வசதியான மற்றும் சிக்கமான கட்டணங்களுடனான வழியை மக்களுக்கு வழங்குகிறது. இலங்கையின் இரத்தினக்கற்களுக்கான தலைநகராகத் திகழும் இரத்தினபுரி, தொழில்முனைவோர், வணிகர்கள் மற்றும் சிறு வணிகங்களின் துடிப்பான சமூகத்தைக் கொண்டிருப்பதால், இலங்கையில் ருடிநச தனது சேவையை விரிவுபடுத்துவதில் இது ஒரு இயல்பான அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைந்துள்ளது.
Uber Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான விநியோக சேவைகளுக்கான முகாமையாளர் வருண் விஜேவர்தன அவர்கள் கூறுகையில், “இரத்தினபுரி, உள்ளூர் வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோரின் துடிப்பான சமூகத்தின் தாயகமாக உள்ளது. Uber Eats சேவையை இந்த மாவட்டத்திற்குக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உள்ளூர் வணிகர்களை அதிக வாடிக்கையாளர்களுடன் இணைப்பதன் மூலமும், விநியோக கூட்டாளர்களுக்கு நெகிழ்வான வருமான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், அன்றாட வசதியை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றமுடியும் என நாங்கள் நம்புகிறோம்.”
Uber Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான வாகனச் சேவையின் முகாமையாளர் கௌஷல்யா குணரத்ன அவர்கள் கூறுகையில், “Uber Rides சேவையை இரத்தினபுரிக்குக் கொண்டு வருவதிலும், மாவட்டம் முழுவதும் உள்ள அதிக எண்ணிக்கையான மக்களுக்கு நம்பகமான, சிக்கனமான கட்டணங்களுடன் பயண வசதியை வழங்குவதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த அறிமுகம், உள்ளூர் ஓட்டுநர்களுக்கு புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்குவதோடு, ஒவ்வொரு பயணத்தையும் பாதுகாப்பானதாகவும், தங்குதடையற்றதாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் ஆதரவுடன், இந்கு வசிக்கின்றவர்களுக்கும் வருகை தருகின்றவர்களுக்கும் வசதியான போக்குவரத்தை வழங்குகிறது.”
பல்வேறு வாகன வகைகளில் வீட்டு வாசலிலேயே பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதியுடன், வெவ்வேறு பயணத் தேவைகள் மற்றும் பட்ஜெட்டுகளுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையையும் தெரிவுகளையும் Uber Rides வழங்குகிறது. ஒவ்வொரு பயணமும் GPS தொழில்நுட்ப உதவியுடனான கண்காணிப்பு, பயணப் பகிர்வு, ஓட்டுநர் அடையாளச் சரிபார்ப்பு, செயலி வழி அவசர உதவி மற்றும் 24/7 ஆதரவு உள்ளிட்ட தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் பாதுகாப்பு அம்சங்களால் ஆதரிக்கப்படுகிறது.
இரத்தினபுரியில் மேற்கொள்ளப்படும் இந்த அறிமுகமானது, இலங்கை முழுவதும் Uber நிறுவனம் தொடர்ந்து தனது சேவைகளை விரிவுபடுத்தி வருவதன் ஒரு பகுதியாகும். நுவரெலியாவைத் தொடர்ந்து இந்த ஆண்டில் Uber Eats சேவை அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது நகரம் இதுவாகும். அத்துடன், அண்மையில் கேகாலையில் Uber Rides சேவை விரிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து இது அமைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மேலும் பல சமூகங்களுக்குத் தனது தொழில்நுட்பத் தளத்தைக் கொண்டு சேர்ப்பதில் Uber நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.

You must be logged in to post a comment.