Local

இலங்கை உட்பட 12 நாடுகளுக்கு சவுதி அரேபியாவிற்குள் நுழையத் தடை

சவுதி அரேபியாவிற்குள் செல்லவும் அங்கிருந்து வௌியேறவும் அந்நாட்டு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது.
சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளுக்கு இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கு இவ்வாறு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐரோப்பிய நாட்டவர்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவுதி அரேபியாவில் இதுவரை 45 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
வைரஸ் தாஏக்குதலுக்கு, தற்போது வரை உலகம் முழுவதும் 4 ,630 பேர் பலியாகி உள்ளனர். 1 இலட்சத்து 26 ஆயிரத்து 136 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading