Local

இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை

ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட்டை ( SLC) தற்காலிகமாக தடை செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில்  அரசாங்கத்தின் தலையீடு  அதிகமாக இருப்பதாக நம்புவதால்  இவ்வாறு இலங்கை கிரிக்கெட் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்ற‌து.

இன்று கூடிய சர்வதேச கிரிக்கெட் பேரவை இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது.

இலங்கை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின்  அங்கத்துவ நாடு என்ற‌ ரீதியில் இலங்கை கிரிக்கெட் எதிர்க்கொண்டுள்ள நிலைமை மற்றும் அதன் கடமைகள், நிர்வாகம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்போதே இலங்கை கிரிக்கெட்டை தற்காலிகமாக தடை செய்வது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தற்காலிக தடையின் நிபந்தனைகள் என்ன என்பது தொடர்பில் உடனடியாக அறிய முடியாத நிலையில், நிபந்தனைகள் தொடர்பில்  மிக விரைவில் அறிவிக்கப்ப‌டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading