Local

இலங்கை ஜனாதிபதிக்கு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையிலான வரலாற்று ரீதியான மற்றும் கலாசார பிணைப்புகளை ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள தமிழக முதல்வர் விஜய், ஜனாதிபதியின் கனிவான வாழ்த்துக்களால் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், அதற்காகத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.(Ceylon Focus News)

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading