LocalSports

இலங்கை தொடரை கைப்பற்றியது!

ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெற்றிருந்த நிலையில், இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவர்களில் 116 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஷாங்க 36 பந்துகளில் 51 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குலாப்தின் நைப் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இப்போட்டியில் இலங்கை அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வனிந்து ஹசரங்க 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய துஷ்மந்த சமிர 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மகிஷ் தீக்ஷன ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதன்படி, தொடரின் முதல் போட்டியில் மட்டும் தோல்வியடைந்த இலங்கை அணி தொடரை 2-1 என கைப்பற்றியது.

போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் ஆட்டநாயகனாகவும் துஷ்மந்த சமிர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading