Local

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் இன்று அதிக வெப்பநிலையுடனான காலநிலை நிலவும் என  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், தெற்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இந்த காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதிக நேரம் வெயிலில் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு அந்த திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், அதிக தாகம் மற்றும் தசைப்பிடிப்பு போன்றன ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வயோதிபர்கள் மற்றும் நோய்க்குட்பட்டவர்களை வீட்டிற்குள்ளேயே தங்கவைக்குமாறும் அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை கால்நடைகளை நிழலில் கட்டிவைக்குமாறும் கால்நடைகளுக்கு அதிகமாக தண்ணீரை வழங்குமாறும் மில்கோ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading