Local

இலங்கை மஹர சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடியவர் உயிரிழப்பு

மஹர  சிறைச்சாலையிலிருந்து இன்று (3) அதிகாலை 2.30 மணியளவில் தப்பியோட முயன்ற 9 கைதிகள், சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளால் மடக்கிப்பிடிக்கப்பட்டனர்.
இதன்போது சிறைச்சாலை மதில்மீது ஏறிய கைதியொருவர் தவறிவிழுந்து பலியாகியுள்ளார். அத்துடன், இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.

குறித்த சிறைச்சாலையிலிருந்து அதிகாலை 2.30  மணியளவில் மிகவும் சூட்சுமமான முறையில் தம்பியோடுவதற்கு 9 கைதிகள் முயற்சித்துள்ளனர். மதில்மீது ஏறி தப்புவதற்கே அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இதன்படி  ஒரு கைதி மதில்மீது ஏறியுள்ளார். இதனையடுத்து உஷாரமடைந்த சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கீழிருந்த 8 கைதிகளும் ஓட்டமெடுத்தனர். மதில்மீது ஏறியவர் தவறி விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர் வடகொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.
ஏனைய எட்டு கைதிகளை, கைதுசெய்யும்வேளையில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களும் தற்போது வடகொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
போதைப்பொருள் விவகாரத்துடன் தொடர்புபட்டு சிறைதண்டனை அனுபவித்துவந்த கைதிகள் 9 பேரே இவ்வாறு தப்பிச்செல்ல முயற்சித்துள்ளனர் என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading