Lead News

இலங்கை மின்சார சபைக்கு நாளாந்தம் 250 மில்லியன் ரூபா நட்டம்

  • நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணிகள் தாமதமாவதால், இலங்கை மின்சார சபைக்கு நாளாந்தம் 250 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

    பெட்ரோலிய வள அமைச்சில் நேற்று (24) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், மூன்றாவது கட்ட பணிகள் மற்றும் கெரவலப்பிட்டி LNG மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

    இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 600 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading