Local

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய சட்ட விரோத சொத்துகள் பறிமுதல்!

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் சொத்துக்கள் மீது இன்று (24) காலை மிகப்பெரிய சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

தெமட்டகொட வசந்தவின் மனைவி பெயரில் உள்ள இந்த சொத்துக்களின் பெறுமதி சுமார் 32 கோடி ரூபாவாகும்.

இந்த சொத்துக்களில் நீர்கொழும்பு பிடிபன கடற்கரைக்கு எதிராகவுள்ள  100 பேர்ச் காணியும் அங்கு நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டலும் அடங்கும்.

இரண்டு வருடங்களாக தனியார் பாதுகாப்பு நிறுவனத்தால் பணிக்கமர்த்தப்பட்ட பாதுகாவலரின் பாதுகாப்பில் இந்த ஹோட்டல் இருந்துள்ளது. முற்றுகையிடப்பட்ட நேரத்தில், நீச்சல் குளம் அமைப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தன.

தற்போது, ​​பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் நாய்ப் பிரிவினரின் உதவியுடன் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முழு வளாகத்திலும் விசேட சோதனைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிய வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading