Local

இலங்கை வானில் அதிகாலையில் நிகழும் அதிசயம்!

நாட்டில் கண்கவர் விண்கல் மழையை இந்நாட்களில் காண முடியும் என வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 12 ஆம் திகதி முதல் அதிகாலை வேளையில் இந்த விண்கல் மழையை காண முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது பெர்சீட்ஸ் (Perseids ) விண்கல் மழை என அழைக்கப்படுவதாக கிஹான் வீரசேகர குறிப்பிடுகின்றார்.
இந்த விண்கற்களை அதிகாலை 01 மணி முதல் காண முடியும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், அடிவானத்தில் இருந்து எழும் விண்கற்கள் மெதுவாக மேல் வானத்தை நோக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading