Local

இலஞ்ச ஊழல் வழக்கு: கெஹலிய மற்றும் மகன் பிணையில் விடுதலை

 

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோர் இலஞ்ச ஊழல் வழக்கில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பிப்புக்களைக் கருத்தில் கொண்டு, கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் கெஹலிய ரம்புக்வெல்ல, பதினைந்து பேரை தனது அமைச்சின் ஊழியர்களாக சட்டவிரோதமாக நியமித்து, அவர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்று, அரசுக்கு 8 மில்லியன் ரூபாய்க்கு மேல் நிதி இழப்பை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading