Local

இளவரசி டயானா FBI சதியில் உயிரிழந்தது போன்று நானும் இறக்கலாம் விமலின் கண்டுபிடிப்பு!

 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், உத்தர லங்கா சபையின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தாம் வெளியிட்டுள்ள இந்த அம்பலப்படுத்தல் காரணமாக, அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவினர் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அந்த எதிர்வினைகள் விபத்து அல்லது பிற திடீர் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

பிரித்தானியா இளவரசி டயானாவும் அமெரிக்க இரகசியப் பிரிவினரின் சதியால் உயிரிழந்துள்ளார் என்பது இன்று தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading