இஸ்ரேலிய பிரதமர் கைது செய்யப்படுவார் என எச்சரிக்கை!!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் (ICC) கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காளண்ட் ஆகியோருக்குப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் உலகளவில் சுருங்கி வருகின்றது. ஐசிசியின் உறுப்பு நாடுகளான டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே மற்றும் சுவீடன் ஆகிய நோர்டிக் நாடுகள் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன. குறிப்பாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தமது நாட்டுக்குள் நுழைந்தால் அவர் கைது செய்யப்படுவார் என நோர்வே பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், ஏனைய நோர்டிக் நாடுகளும் இந்த சர்வதேச சட்டக் கடமைகளுக்கு உட்பட வேண்டியுள்ளதால் இஸ்ரேலிய அதிகாரிகளின் இராஜதந்திரப் பயணங்கள் பெரும் சட்டச் சிக்கலை எதிர்கொண்டுள்ளன

You must be logged in to post a comment.