இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்!! உதவி செய்ய உலக நாடுகளுக்கு அழைப்பு!!!
இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என அந்நாட்டு அரசு கோரிக்கை வைத்துள்ளது.
ஜெருசலேமின் புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத் தீ காரணமாக, ஆயிரக்கணக்கான குடிமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஏராளமான தீயணைப்பு விமானங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தீயை அடக்க முயற்சிக்கின்றனர்.
கடும் வெயில் மற்றும் வேகமாக வீசும் வறண்ட காற்று காரணமாக, தீ கட்டுக்கடுங்காமல் அதிவேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

You must be logged in to post a comment.