இஸ்ரேலில் படுகொலை செய்யப்பட்ட 2 பிள்ளைகளின் தந்தை!
இஸ்ரேலில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த 38 வயதுடைய இலங்கையர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தரிந்து ஷானக என்ற 38 வயது நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் அம்பலாங்கொட, படபொல, தொரல கொண்டகல பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட அவர் படபொல, ஒலபெத்தவை பிறப்பிடமாகக் கொண்டவர்.
மது விருந்து ஒன்றில் ஏற்பட்ட வாய்த்தகராறு இந்தக் கொலையின் காரணமாகியுள்ளதுடன், கொலையை புரிந்தவர் ஆபிரிக்கர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இளைஞர் தனது குடும்பத்தின் நலனுக்காக பல கனவுகளுடன் வெளிநாடு சென்றிருந்தவர் என்பதுடன் அவரது திடீர் மரணம் அவரது குடும்பத்திற்கும், வெளிநாடுகளில் வாழும் இலங்கை சமூகத்திற்கும் மிகுந்த அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

You must be logged in to post a comment.