Local

இஸ்ரேல் நாட்டின் பிரதமர் தனிமைப்படுத்தப்பட்டார்

உதவியாளருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனிமைப்படுத்தப்பட்டார்.

இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்களில் இன்று வெளியாகியுள்ள செய்திகளில் கூறப்படுவதாவது:

பிரதமரின் நெருங்கிய உதவியாளர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று திங்களன்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறு இரண்டு உதவியாளர்களுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இஸ்ரேலைப் பொறுத்தவரை இதுவரை அங்கு 4,213 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் 16 பேர் இதுவரை கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading