இஸ்ரேல் மீது ஈரான் பாரிய தாக்குதல்!!
இஸ்ரேல் மீது தனது 24-வது கட்ட ஏவுகணைத் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பகுதிகள் மற்றும் தலைநகர் டெல் அவிவ் ஆகியவற்றை நோக்கி ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கியுள்ளன.
இந்த 24-வது கட்டத் தாக்குதலில் ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளால் (Iron Dome/Arrow) தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும், எவ்வித இடையூறுமின்றி அவை இலக்குகளை அடைந்ததாகவும் ஈரான் உரிமை கோரியுள்ளது. டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேல் பகுதிகளில் அடுத்தடுத்துக் கேட்ட வெடிப்புச் சத்தங்களால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

You must be logged in to post a comment.