ஈரானின் எச்சரிக்கை: அமெரிக்கா கல்வி நிறுவனம் online முறைமைக்கு மாற்றம்!!
லெபனானில் உள்ள புகழ்பெற்ற பெய்ரூட் அமெரிக்கப் பல்கலைக்கழகம் (AUB), மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கக் கல்வி நிறுவனங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரான் விடுத்துள்ள நேரடி எச்சரிக்கையைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களுக்கு தனது செயல்பாடுகளை இணையவழி (Remote) முறைக்கு மாற்றுவதாக அறிவித்துள்ளது. ஈரானில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்கள் மீது அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் அவை அழிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC), அதற்குப் பதிலடியாகவே இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளது. இத்தாக்குதலை அமெரிக்க அரசு திங்கட்கிழமை மதியம் 12 மணிக்குள் அதிகாரப்பூர்வமாகக் கண்டிக்கத் தவறினால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் கெடு விதித்துள்ளது.

You must be logged in to post a comment.