World

ஈரான் போரால் இருளில் மூழ்கும் பாகிஸ்தான்…

ஈரான் போரால், ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்ட நிலையில், பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதில், பாகிஸ்தானும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தட்டுப்பாட்டை சமாளிக்க ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இணைய வழி கல்வி, ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் மின்சார நிறுத்தம்

தற்போது, நாடு முழுவதும் தினமும் திட்டமிடப்பட்ட மின்சார நிறுத்தத்தை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் நாளொன்றுக்கு மாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலான காலத்தில் 2 மணி நேரம் மின்சார நிறுத்தம் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதில், கராச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஈரான் போரால் இருளில் மூழ்கும் பாகிஸ்தான் - நாளொன்றுக்கு 7 மணி நேர மின்சார நிறுத்தம் | 7 Hours Power Outage In Pakistan Due To Iran War

தற்போது இந்த மின்சார நிறுத்த நேரம், 6 முதல் 7 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய பாகிஸ்தான் மின்சாரத் துறை அமைச்சர் அவாய்ஸ் லெகாரி” LNG இறக்குமதி தடைகள் காரணமாக, 6,000 மெகாவாட் திறன் கொண்ட அனைத்து LNG அடிப்படையிலான ஆலைகளும் பெரும்பாலும் செயல்படாமல் உள்ளன.

பாசனத்திற்காக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீருக்குப் பதிலாக சமீபத்திய மழை பெய்ததால், நீர்மின்சார விநியோகமும் 1,600 மெகாவாட்டாக இருந்தது.

ஈரான் போரால் இருளில் மூழ்கும் பாகிஸ்தான் - நாளொன்றுக்கு 7 மணி நேர மின்சார நிறுத்தம் | 7 Hours Power Outage In Pakistan Due To Iran War

LNG அடிப்படையிலான மற்றும் நீர்மின் நிலையங்கள் இயங்கியிருந்தால் தற்போது உள்ள 3,400 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. ஒவ்வொரு 500-600 மெகாவாட் பற்றாக்குறையும் ஒரு மணி நேர மின்சார நிறுத்தத்திற்கு வழிவகுக்கிறது.

இதனால், கிராமம் மற்றும் நகரம் என பாகுபாடு இல்லாமல் 6 முதல் 7 மணி நேரம் மின்சார நிறுத்தம் மேற்கொள்ள அரசு நிர்பந்திக்கப்பட்டுள்ளது. இது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லாகூரில் உள்ள சர்விசஸ் மருத்துவமனையில், மின்சார நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், விஐபி அறைகளுக்கு ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை அரங்கங்களுக்குள் மின்சாரம் இல்லை. எரிபொருள் இல்லை என அறுவை சிகிச்சை குற்றஞ்சாட்டியுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading