அழகான பெண் 1 பில்லியன் டொலர் வேண்டும்! உகண்டா இராணுவ தளபதி மிரட்டல்!!
முன்னதாக ஈரானை வெறும் 14 நாட்களில் தமது படைகளால் கைப்பற்ற முடியும் என மிரட்டல் விடுத்த உகாண்டா ராணுவத் தளபதி முஹூஸி கெய்னருகாபா, தற்போது துருக்கி நாட்டைக் குறிவைத்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
உகாண்டா அதிபரின் மகனான இவர், துருக்கி அரசாங்கம் தனக்கு 1 பில்லியன் டாலர் பணத்தையும், அந்த நாட்டின் “மிக அழகான பெண்” ஒருவரைத் தனக்கு மனைவியாகவும் வழங்க வேண்டும் என விசித்திரமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சோமாலியாவில் உகாண்டா ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் துருக்கி பொருளாதார ரீதியாகப் பயனடைவதாகவும், அதற்கான விலையாக இதனை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற 30 நாட்கள் காலக்கெடு விதித்துள்ள அவர், தவறும் பட்சத்தில் உகாண்டாவில் உள்ள துருக்கி தூதரகம் மூடப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இராஜதந்திர ரீதியாகப் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தப் பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

You must be logged in to post a comment.