ஈரான் மீது மீண்டும் தாக்குதல்..?
ஈரான் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்காக, எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சார வசதிகள் மீதான தாக்குதல்கள் உட்பட, ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்க அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் தலைவர் அழுத்தம் கொடுத்து வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பெயர் குறிப்பிடப்படாத, தகவலறிந்த அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அமெரிக்க சென்ட்காம் தலைவர் கடந்த வாரம் இஸ்ரேலுக்கு வருகை தந்தபோது இந்த முன்மொழிவை முன்வைத்தார் என இஸ்ரேலின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலிய இராணுவத்தின் உயர்மட்ட செயல்பாட்டுக் குழுவின் கூட்டத்தில், தலைமைத் தளபதி எயால் ஜமீர் மற்றும் பிற மூத்த தளபதிகளுடன் சென்ட்காம் தலைவர் கலந்துகொண்டதாக விளக்கப்பட்டுள்ளது.
சென்ட்காம் தலைவர் நிலைப்பாடு
அந்த சந்திப்பின் போது, ஈரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்கவும், அந்நாட்டின் எரிவாயு, எண்ணெய் மற்றும் மின்சாரத் தொழில்களுடன் தொடர்புடைய வசதிகள் உள்ளிட்ட தேசிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தவும் அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சண்டையை மீண்டும் தொடங்குவதே ஒரே வழியாக அமையக்கூடும் என்றும், ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்களை நடத்த வேண்டியிருக்கலாம் என்றும் சென்ட்காம் தலைவர் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.