World

உக்ரைன் ரஷ்யா மோதலில் 57 பேர் உயிரிழப்பு 169 பேர் காயம்!

உக்ரைனில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் முதல் நாளான நேற்று (பிப்ரவரி 24), உக்ரைன் பிரதேசத்தில் ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலின் விளைவாக தற்போது, ​​169 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் 57 பேர் கொல்லப்பட்டனர் என்று உக்ரைனின் சுகாதார அமைச்சர் கூறினார். TSN தொலைக்காட்சியின் ஒளிபரப்பில் அவர் இதனைக் கூறினார்.

இறந்தவர்களில், 40க்கும் மேற்பட்டவர்கள் இராணுவ வீரர்கள் என்றும் குறைந்தது 10 பேர் பொதுமக்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும், உயிரிழந்தவர்களில் Chuguiv பகுதியில் 1 குழந்தையும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, Brovary, Lviv, Mariupol, Kharkiv, Odessa, Donbas, Hostomel உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. செர்னோபில் நகரமும் நேற்று ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading