World

உக்ரைன் விவகாரத்தில் வெளி நபர்கள் தலையிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் புடின் எச்சரிக்கை!

உக்ரைன் விவகாரத்தில் வெளி நபர்கள் யாரேனும் தலையிட்டால், வரலாற்றில் இதுவரை சந்திக்காத விளைவுகள் சந்திக்க வேண்டி வரும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உக்ரைன் தலைநகர் கிவ் மற்றும் பிற நகரங்களை குறிவைத்து ரஷ்ய படைகள் இன்று வான்வெளி தாக்குக்தலை நடத்தி வருகிறது. ஏவுகணை தாக்குதல், விமானப்படை தாக்குதல், தரைவழி தாக்குதல் என அனைத்து வகை தாக்குதல்களையும் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவோருக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக, புதின் கூறுகையில், உக்ரைன் விவகாரத்தில் வெளி நபர்கள் யாரேனும் தலையிட விரும்பினால், இந்த விவகாரத்தில் தலையிட்டால் வரலாற்றில் இதுவரை சந்தித்திராத விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். அனைத்து வகையான முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading