World

உணவால் முதல் சந்திப்பில் முறிந்த காதல்!

சீனாவில் பெண் ஒருவர் உணவால் காதல் உறவை முறித்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காதலரின் குடும்பத்தார் தமக்கு அளித்த உணவைக் கண்டு எரிச்சலடைந்த காதலி இந்த முடிவை எடுத்துள்ளார்.

தமக்கு வழங்கப்பட்ட உணவு வகைகளின் புகைப்படங்களை அப்பெண் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார்.

அப்புகைப்படங்கள் 7 மில்லியன் தடவைக்கும் மேல் பார்வையிடப்பட்டுள்ளன. 4,300 கருத்துகளும் பதிவிடப்பட்டுள்ளன.

அந்த 20 வயது மதிக்கத்தக்கப் பெண் தென்மேற்கு சீனாவின் சீச்சுவானைச் (Sichuan) மாநிலத்தைச் சேர்ந்தவர்.

சுமார் இரண்டரை மணி நேரம் பயணம் செய்து தமது காதலரின் பெற்றோரை அவர் காணச் சென்றார்.

தமது உத்தேச வருங்கால மாமனார்- மாமியாருடன் முதல் சந்திப்பு என்பதால் விருந்து தடபுடலாக இருக்கும் என அவர் எண்ணினார். 

ஆனால் தமக்கு நூடுல்ஸ், பொரித்த முட்டை, பரங்கிக்காய் சூப், மேலும் சில காய்கறிப் பொறியல்கள் மட்டுமே பரிமாறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தமக்குப் பரிமாறப்பட்ட உணவு குறித்து அதிருப்தி அடைந்த பெண், அது குறித்துக் காதலரிடம் புகாரளித்தார். ஆனால், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் இந்த மாதிரியான உணவு வகைகள்தான் இருக்கும் என அந்த நபர் பதில் கொடுத்துள்ளார். இந்த நிலையில் இந்த காதலரின் பெற்றோருடனான முதல் சந்திப்பிலேயே காதல் உறவு முறிந்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading