World

போருக்கு மத்தியில் தீவிரமடையும் கணவன் மனைவி சண்டை!

உக்ரைனில் போருக்கு மத்தியில் தம்பதியர் பலரிடையே அதிகமான வாக்குவாதம் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. 

அடித்தள முகாம்களில் ஒளிந்திருக்கும் வேளையிலும் அவர்களிடையே கூடுதல் சச்சரவு ஏற்படுவதாக நம்பப்படுகிறது.

ஊடகத்திடம் பேசிய 68 வயது ஒலெக்சாண்டருக்கும் 66 வயது லியுட்மிலா முரேனெட்ஸுக்கும்  திருமணமாகி 40 ஆண்டுகள் ஆகின்றன. 

10 மாதங்களாக ஒரேயிடத்தில் சிக்கிக்கொண்டு ஒரே முகத்தைக் காணவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் தம்பதியர் இடையில் சண்டை ஏற்படுவது இயல்பே என்று கருதப்படுகிறது. 

உக்ரேனியப் போர் தொடங்குவதற்கு முன்பு, ஒலெக்சாண்டரும் அவரது மனைவியும் மாலை வேளையில் மட்டுமே சந்தித்தனர். இப்போதோ, எந்நேரமும் ஒன்றாக இருப்பதால் சண்டை அதிகமாகியுள்ளது. 

அவர்கள் மாத்திரமின்றி கிழக்கு உக்ரேனில் இருக்கும் பல தம்பதியரின் திருமணவாழ்க்கை போரால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது. 

குளிர்காலத்தில் ஒரே இடத்தில் அடைந்திருப்பது ஒருசிலரின் உறவை வலுப்படுத்துகிறது, பலரின் உறவைச் சேதப்படுத்துகிறது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading