Local

உண்மைகள் மறைக்கப்பட்ட வஸீம் தாஜுதீன் படுகொலை!

கொழும்பு) – பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதிவான் ஷலனி பெரேரா இன்று(20) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 500 தொலைபேசி உரையாடல்களது பகுப்பாய்வு அறிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதன்படி, சந்தேக நபர்களான சிரேஷ்ட துணை பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் முன்னாள் நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர ஆகியோர் சுகயீனமுற்றுள்ள காரணத்தினால் நீதிமன்ற முன்னிலையில் முன்னிலைப்படுத்த முடியவில்லை எனவும் அவர்களது சட்டத்தரணியினர் நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தனர்.

கொலை விவகாரம் :

கடந்த 2012 மே 17 ஆம் திகதி அதி­காலை வேளையில் வஸீம் தாஜுதீன் பய­ணித்த அவ­ரது கார் நார­ஹேன்­பிட்டி சலிகா மைதா­னப்­ப­கு­தியில் எரிந்து கொண்­டி­ருந்த போது அதனை அணைக்க முற்­பட்­ட­வர்கள் வழங்­கி­யுள்ள வாக்குமூலங்கள் கிரு­லப்­ப­னையில் கைப்­பற்­றப்­பட்ட சீ.சீ.ரி.வி.காட்­சி­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அவ­ரிடம் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தகவல்கள் தெரிவித்திருந்தன.

வஸீம் தாஜு­தீனின் கார் எரியும் போது அவ்­வி­டத்­துக்கு வந்த நபர் ஒருவர் அதனை அணைக்க காரை நோக்கி செல்லும் போது, அருகே போக வேண்டாம் என திஸ்­ஸவை ஒத்த உருவமைப்பைக் கொண்ட நபர் ஒருவர் தெரி­வித்­த­தாக பொலி­ஸா­ரினால் பதிவு செய்­யப்­பட்­டுள்ள வாக்கு மூலம் மற்றும் அந்த இடத்தில் இரு டிபண்டர் ரக வாக­னங்கள் இருந்­த­தா­கவும் அவை சிறிது நேரத்தில் மின்னல் வேகத்தில் மறைந்­த­தா­கவும் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள வாக்குமூலங்­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

அத்­துடன் கிரு­லப்­பனை சந்­தியில் இருந்து பெறப்­பட்­டுள்ள சீ.சீ.ரி.வி.காட்­சி­களில் பல வாக­னக்கள் வஸீம் தாஜு­தீனின் வாக­னத்தை துரத்தும் நட­வ­டிக்கை பதி­வா­கி­யுள்­ளது.

வஸீம் தாஜுதீன் அந்த வாக­னங்­க­ளி­ட­மி­ருந்து தப்பி செல்ல முயற்­சிக்கும் காட்­சி­களும் அதனை தடுக்கும் காட்­சி­களும் இவ்­வாறு பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

எவ்­வா­றா­யினும் இந்த காட்­சிகள் அடங்­கிய இறு­வட்டு தற்சமயம் கொழும்பு பல்­கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் தொடர்­பாடல் பிரி­வி­னரால் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்பட்டிருந்தது.

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக் ஷவின் சிரி­லிய சவிய எனும் திட்­டத்தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட டிபெண்டர் வண்­டியில் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­ட­தாக சி.ஐ.டி.க்கு கிடைத்­துள்ள மிக நம்­ப­க­ர­மான தக­வலை மையப்­ப­டுத்தி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டி­ருந்­தன.

டப்­ளியூ.பி. கே.ஏ. 0642 எனும் குறித்த டிபெண்டர் வண்­டியில், உயி­ரியல் கூறுகள் உள்­ளதா என்­பதைக் கண்­ட­றிய அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ருக்கு அனுப்பப்பட்டு, அதனை சோதனை செய்­துள்ள அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளர்கள், கொலை இடம்­பெற்று பல வரு­டங்கள் கடந்த போதும், குறித்த டிபெண்­டரில் ஆய்­வு­களை முன்­னெ­டுக்க முடி­யு­மான நிலை­மையில் உயி­ரியல் கூறுகள் இருப்­பதைக் கண்­ட­றிந்­து இற்றைக்கு அனைத்தும் வெறும் பேசுபொருளாகவே உள்ளது.

இற்றைக்கு வஸீம் தாஜுதீன் என்பது கடந்த அரசியலில் வாக்குகளை சேகரிக்கும் ஒரு ஆயுதமாக பயன்படுத்து வந்த நிலையில், அந்த அரசிலும் எவ்வித நியாயமும் எட்டப்படவில்லை. அவ்வாறு இருக்க இந்நாள் அரசு அதனை சாதகமாக்கி கொள்ள நாடகங்களை முன்னெடுத்துள்ளமை தெளிவாகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading