Uncategorized

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்தது!

துருக்கி, சிரியாவில் கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 45 ஆயிரத்தை கடந்தது.
சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது.
அதில் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியிலும் சிரியாவின் வடக்குப் பகுதியிலும் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 46,450 ஆக உயா்ந்துள்ளது.
சனிக்கிழமை இரவு நிலவரப்படி, துருக்கியில் 40,640 பேரும், சிரியாவில் 5,810 பேரும் நிலநடுக்கத்துக்கு பலியாகியுள்ளனா்; இரு நாடுகளிலும் சுமாா் 122,500 போ் காயமடைந்துள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading