Local

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய ISIS பயங்கரவாத அமைப்பு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய ISIS பயங்கரவாத அமைப்புப் பற்றிய தகவல்கள் ஒரு வருடத்தின்பின்பு கசிந்துள்ளது.
ஸஹ்ரான் ஹாஷிமின் உதவியாளரான இமாத் என்பவர் துருக்கியினூடாக சிரியாவுக்குச் சென்று ISIS செயற்பாட்டாளர்களைச் சந்தித்துவிட்டு மீண்டும் 2016 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பியுள்ளார். கைப்பற்றப்பட்ட மென்பொருள் பொறியியலாளர் ஒருவரினால் பயங்கரவாதத் தடுப்பு அதிகாரிகளுக்கு இவ்விடயம் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
50 கோடி ரூபா பணமும் ஸஹ்ரான் ஹாஷிமுக்குக் கிடைத்துள்ளதாக குறித்த மென்பொருள் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார். இது இவ்வாறிருக்க, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலுடன் எந்தவொரு ISIS உறுப்பினருக்கும் தொடர்பில்லை என ஏற்கனவே இலங்கை அரசியல்வாதிகள் பலர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading