World

உலகப் புகழ் பெற்ற ஏர் இந்தியா விமானத்தை வாங்கியது டாடா குழுமம்!

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் விலைக்கு வாங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18,000 கோடிக்கு ஏலத்தின் மூலம் வாங்கியுள்ளது டாடா சன்ஸ் குழுமம்.

இதன்மூலம் 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியாவானது டாடா கைவசம் செல்கிறது. இதன்மூலம் டாடாவிடம் இருந்து வாங்கிய ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடாவுக்கே இந்திய அரசு விற்றுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை மத்திய முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையில் ரூ 61,562 கோடி நஷ்டத்தில் தவித்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியுள்ளது.

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ஏலத்தில் விடப்பட்டது. இதில் நான்கு முனை போட்டி நிலவிய நிலையில் இறுதியில் அஜய் சிங்குக்கும், டாடாவுக்கு போட்டி நிலவியது. இதில் இறுதியாக ஏலத்தில் டாடா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading