World

உலகின் மிக உயரமான கட்டிடத்தில் மிளிர்ந்த ”தமிழ்”

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில், தமிழின் தொன்மையை பறைசாற்றும் வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது.

துபாய் Expo 2020
உலகின் மிகப்பெரிய கண்காட்சிகளில் ஒன்றான துபாய் Expo 2020ல் உலகம் முழுவதும் இருந்து 192 நாடுகள் கலந்து கொள்கின்றன.

கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த கண்காட்சி, மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.

அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, கலை, பொழுதுபோக்கு எனப் பல தளங்களில் பரிணமிக்கும் இந்தக் கண்காட்சியில் தமிழக அரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புர்ஜ் கலிபாவில் தமிழ்
தமிழரின் பெருமையை பறைசாற்றும் விதமாக புர்ஜ் கலிபாவில் நேற்றிரவு தமிழரின் பெருமையையும் பண்பாட்டையும் விளக்கும விதமாக கீழடி குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது, இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டு ரசித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading