ஊழலில் சிக்கித் தவிக்கும் இலங்கை: பெரிய மீன்களை நோக்கி அநுர அரசின் வலை!
மூன்று ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, தற்போது இலங்கையில் ஒருகாலத்தில் “அடைய முடியாதவர்கள்” என கருதப்பட்ட அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முடக்கிய விடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல அதிகாரிகள் நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திசநாயக்க, இந்த ஆண்டு மே மாதத்தில் “குற்றவியல் தீர்ப்பின்றியும்” அரசுப் பணத்தை மீட்கும் விசேட அதிகாரங்களைப் பெற்றார்.
அவர் தெரிவிக்கையில், “இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியின் பிரதான காரணம் ஊழல் தான்.” என்றார்.
இலங்கை அரசாங்கங்களின் ஊழல் காரணமான மொத்த நிதி இழப்புகள் குறித்த அதிகாரபூர்வ தரவுகள் எதுவும் இல்லை. ஆனால் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கும் கருத்தின் பிரகாரம், கடந்த பல தசாப்தங்களில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்புகள் பில்லியன் கணக்கான டொலர்கள் அளவாகும்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை அரசுக்கு ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னுரிமையாகக் கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளது. தற்போது CIABOC-யிடம் ஆயிரக்கணக்கான வழக்குகள் குவிந்துள்ளன.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் வாக்குறுதி
இடதுசாரி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஊழல் ஒழிப்பை தனது முக்கிய தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்துள்ளார். “அரசின் அதிகாரம் நீதியை நிலைநாட்ட வேண்டும். ஆனால் அது பெரும்பாலும் தனிப்பட்ட இலாபத்திற்காக பயன்படுத்தப்படுகிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ குடும்பம் மற்றும் அதிகாரிகள் சிறையில்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், உச்சநீதிமன்றம் 2023இல் அவரும் அவரது சகோதரர்களும் “ பொருளாதார வீழ்ச்சிக்கு பங்களிப்பு செய்தனர் எனவும் பொது நம்பிக்கையை மீறினர்” என தீர்ப்பளித்தது.
கோட்டாபய ராஜபக்ஷ பதவியைவிட்டு விலகிய பின்னர், நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் முயற்சியாக ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அவர் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிவாரண தொகையைப் பெற்றார்.
ஆனால், ஓகஸ்ட் மாதத்தில் அவர் அரசுப் பணத்தை தனிப்பட்ட பயணங்களுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுக்காக அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர்கள் மகிந்தானந்த அலுத்தகமகே (20 ஆண்டுகள்), நளின் பெர்னான்டோ (25 ஆண்டுகள்) ஆகியோருக்கு கடுமையான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், மஹிந்தவின் மருமகன் சஷிந்திர ராஜபக்ஷ மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களான நமல் ராஜபக்ஷ (பாராளுமன்ற உறுப்பினர்) மற்றும் முன்னாள் கடற்படை அதிகாரி யோஷித ராஜபக்ஷ மீது Money Laundering குற்றச்சாட்டுகள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ்மா அதிபர் குற்றவியல் வலையமைப்பு ஒன்றை இயக்கியதாக கைது செய்யப்பட்டார். சிறை ஆணையாளர் கைதிகளிடம் இருந்து லஞ்சம் பெற்று விடுதலை செய்ததற்காக சிறை தண்டனை பெற்றார். குடிவரவு கட்டுப்பாட்டு அதிகாரியும் கோடிக்கணக்கான வீசா மோசடி வழக்கில் சிக்கியுள்ளார்.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்ட 2024 உலக ஊழல் குறிகாட்டியில் இலங்கை 180 நாடுகளில் 121வது இடத்தில் உள்ளது. இது நாட்டின் ஊழலின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.
(இது AFP இன் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது)

You must be logged in to post a comment.