World

எக்ஸ் (X) வலைத்தளத்தில் இரு புதிய சந்தா முறைகள் விரைவில் அறிமுகம்

தற்போது எக்ஸ் (X) என அழைக்கப்படும் ட்விட்டர் வலைத்தளத்தில் இரண்டு புதிய சந்தா முறைகள் விரைவில் அமுலுக்கு வரவிருப்பதாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இந்த சந்தா முறைகள் விரைவில் அமுலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு புதிய சந்தா முறைகளில் ஒன்று குறைந்த விலையிலும், மற்றொன்று அதிக விலையிலும் கிடைக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் குறைந்த விலை திட்டத்தில் விளம்பரங்கள் எதுவும் குறைக்கப்படாது என்றும், விலை உயர்ந்த சந்தாவில் விளம்பரங்கள் எதுவும் இடம்பெறாது என்றும் தெரிவிக்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் வெளியான தகவல்களின் படி, எக்ஸ் (X) வலைத்தளத்தில் சந்தா முறைகளை பேசிக் (Basic) , ஸ்டாண்டர்டு (standard) மற்றும் பிளஸ் (Plus) என மூன்று நிலைகளில் பிரிப்பது பற்றி எக்ஸ் (x) தலைமை செயல் அதிகாரி லிண்டா ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது எலோன் மஸ்க் தெரிவித்துள்ள இரண்டு சந்தா முறைகள் பேசிக் (Basic) மற்றும் பிளஸ் (Plus) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading