LocalSports

எஞ்சலோ மெத்யூஸுக்கு கொரோனா!

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் எஞ்சலோ மெத்தியூஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.கொரோனா அறிகுறிகள் தென்பட்டமையினால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.இதனையடுத்து அவர் மற்றைய, குழு உறுப்பினர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.தற்போது காலியில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடி வந்திருந்தார். நேற்று முன்தினம் இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பாடியபோது, எஞ்சலோ மெத்தியூஸும் அணியில் இடம்பெற்றிருந்தார்.இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதன் காரணமாக, அவருக்கு பதிலாக ஓஷத பெர்னாண்டோ அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading