அந்நியச் செலாவணி வருவாயில் 60% இற்கும் அதிகமாக சம்பாதிக்கும் தனியார் அல்லது அரசு நிறுவனங்கள் எதிர்காலத்தில் தங்கள் மாதாந்த மின் கட்டணத்தை அமெரிக்க டொலர்களில் செலுத்த வேண்டும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.