Local

எதிர்வரும் 30 ஆம் திகதி விடுமுறையால் சர்ச்சை!

எதிர்வரும் 30ஆம் திகதி வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கி துறையில் பாரிய சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

உள்ளூர் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக நாட்டில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. இந்த சூழலில், 30ஆம் திகதி அரசாங்கத்தினால் வங்கி விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சமீபகால வரலாற்றில் உள்ளூர் வங்கி துறைக்கு வழங்கப்பட்ட மிக நீண்ட விடுமுறையாகியுள்ளது. இதனால் வங்கி துறைக்குக்குள் கடுமையான சர்ச்சை மற்றும் குழப்ப நிலைகள் ஏற்பட்டுள்ளது.

ஜுன் 29ஆம் திகதி வியாழக்கிழமை வங்கி மற்றும் பொது விடுமுறை தினமாகும். அன்றைய தினம் ஹஜ் பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வங்கிகளுக்கு விசேட விடுமுறை அளிப்பதாக அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்.

ஜூலை மாதம் முதலாம் மற்றும் 2ஆம் திகதி சனி மற்றும் ஞாயிற்றுகிழமையாகும். ஜூலை மாதம் 3 ஆம் திகதி போயா தினமாகும். இதனால், தொடர்ந்து 5 நாட்கள் நாட்டின் வங்கி சேவை முடங்கியுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருக்குமாறு அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி விசேட அறிவித்தல் விடுத்துள்ளதாக அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading