Local

எனது சொத்துக்களை கணக்காய்வு செய்ய பா.உறுப்பினர் ஒருவர் தெரிவிப்பு!

தமது சொத்துக்களை கணக்காய்வுக்கு உட்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை கணக்காய்வுக்கு உட்படுத்தினால் தமது சொத்துக்களை முதலில் கணக்காய்விற்கு உட்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் திருடர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் உயர் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரது சொத்துக்களும் கணக்காய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரியுள்ளார்.

நீண்ட காலமாக நாடாளுமன்றில் அங்கம் வகித்தும் ஊழல் மோசடிகளில் ஈடுபடாதவர்களும் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்பாவி அரசியல்வாதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading