Local

எம்மால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் ரணில் தெரிவிப்பு!

கட்சிகள் கொளைகளைக் களைந்து அனைவரும் ஒன்றிணைந்து புதிய திட்டங்களுடன் செயல்பட முன்வர வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “புதிய அரசியல் திருத்தங்கள் ஊடாக நாட்டின் இன்றைய நெருக்கடி நிலைமைகளை வென்றுவிட முடியாது. கட்சிகள் கொள்கைகளைக் களைந்து அனைவரும் ஒன்றிணைந்து புதிய திட்டங்களுடன் செயல்பட முன் வர வேண்டும்.
அதன் ஊடாகவே நெருக்கடி நிலையை வெற்றிக்கொள்ள முடியும். நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத அரசாங்கத்தினால் பயன் இல்லை; அனைவரினதும் பங்களிப்பும் அவசியமானது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு எம்மால் முடியும், அதற்கு புதிய திட்டங்கள், கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading