World

எரிந்துகொண்டிருக்கும் கட்டிடத்திலிருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்!

தென்னாபிரிக்காவில் வன்முறைகள் காரணமாக எரிந்துகொண்டிருக்கும் கட்டிடமொன்றிலிருந்து குழந்தையை தாய் தூக்கி வீசுவதை காண்பிக்கும் காணொளிகளும் படங்களும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
டேர்பனில் எரிந்துகொண்டிருக்கும் கட்டிடத்தின் மேல்தளத்திலிருந்து தாய் குழந்தையை கீழே வீசுகின்றார்.
இதன் பின்னர் தாயும் குழந்தையும் பாதுகாப்பாக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து தென்னாபிரிக்காவில் மோசமான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி சிறையிலடைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக 72 இதுவரை உயிரிழந்துள்ளனர்.
வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினரை அரசாங்கம் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டுள்ள 15 மாத சிறைத்தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளதை தொடர்ந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading