Sports

கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

கிரிக்கெட் வீரர் தோனியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது.

தற்போது சினிமாவில் வாழ்க்கை வரலாறு கதைகளை எடுப்பது ஒருவித ட்ரெண்டாகியுள்ளது. முன்னதாக தோனி, சச்சின், கபில்தேவ் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படமாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவருமான கங்குலியின் வாழ்க்கை வரலாறும் படமாகவுள்ளது. இதற்கு கங்குலியும் சம்மதம் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இந்த படம் 200 முதல் 250 கோடி ரூபாய் முதலீட்டில் பெரிய பட்ஜெட் படமாக உருவாக உள்ளது. பயோபிக் படம் படத்தில் கங்குலியின் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பு நிறுவனம், உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading