Local

எரிபொருள் வரிசையில் மேலும் இரண்டு மரணங்கள் பதிவானது!

நீர்கொழும்பு – தம்பரவில மற்றும் தங்கொட்டுவை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பெற வந்த இருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (10) காலை நீர்கொழும்பு, தம்பரவில எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற வந்த மொஹமட் ஷரீப்தீன் எனும் 50 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருளைப் பெற்றுக் கொண்டு தனது காருக்கு காற்றடிப்பதற்காகச் சென்ற அவர், காரில் வைத்து திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தங்கொட்டுவை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருந்த பஸ் ஒன்றின் சாரதி நேற்று (09) திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பஸ் சாரதியான, பன்னல, கோணவில பிரதேசத்தைச் சேர்ந்த எச்.ஏ. சமிந்த புஸ்பகுமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading