World

எரிவாயு கசிவால் ஏழு பேர் உயிரிழப்பு!

இத்தாலியின் சிசிலி நகரில் எரிவாயு கசிவு என்று சந்தேகிக்கப்படும் விபத்தில், நான்கு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனைத் தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில், திங்கட்கிழமையன்று நான்கு சடலங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை ரவனுசாவிலுள்ள சிசிலி நகரில் நான்கு குடியிருப்பு கட்டடங்களில் நடந்த இந்த விபத்தில், இதுவரை குறைந்தபட்சம் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு பேரை மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடி வருவதாகத் தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர். இந்த வெடி விபத்து காரணமாக, 100க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. ஆனால், எரிவாயு கசிவு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். பல நாட்களாகத் தீவிரமான எரிவாயு வாடை வந்ததாக அங்கு குடியிருப்பவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading