Lead News

ஏப்ரல் 25 பொதுத் தேர்தல் ஆணைக்குழு பரிந்துரை

பாராளுமன்றம் மார்ச் 2 ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

இதன்படி பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கல் மார்ச் 11 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதிவரை தேர்தல் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்படலாம்.

அத்துடன், பொதுத்தேர்தலின் பின்னர் 9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் மே மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் எனவும் அறியமுடிகின்றது.

அதேவேளை, மார்ச் 1 ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கலாம் என சட்டமா அதிபரும் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என அறியமுடிகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading